கஷோக்ஜி கொலை விவகாரத்தில் செளதி இளவரசரைக் காப்பாற்றிய டிரம்ப் – வெள்ளை மாளிகை சந்திப்பில் எழுந்த சர்ச்சை.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி அரேபிய பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் இடையிலான வெள்ளை மாளிகை சந்திப்பில், பத்திரிகையாளர் ஜமால் கஷோக்ஜி கொலை விவகாரம் மீண்டும் உலக கவனத்தை ஈர்த்துள்ளது. 2018ல் இஸ்தான்புல்லில் உள்ள செளதி தூதரகத்தில் நடந்த இந்த கொலை சம்பவம், சர்வதேச மட்டத்தில் கடும் அதிர்வுகளை ஏற்படுத்தியதாகும்.
டிரம்ப் – “இளவரசருக்கு எதுவும் தெரியாது”:ஓவல் அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகப் பேட்டியில், கஷோக்ஜி கொலை குறித்து எழுந்த கேள்வி, டிரம்பை வெளிப்படையாகவே கோபமடைய வைத்தது. “நீங்கள் மிகவும் சர்ச்சைக்குரிய மனிதர் பற்றி பேசுகிறீர்கள். பலருக்கும் அவர் பிடித்திருக்கவில்லை. சில விஷயங்கள் நடந்துவிட்டன… ஆனால் இந்த சம்பவம் குறித்து இளவரசருக்கு எதுவும் தெரியாது,” என்று சீற்றத்துடன் பதிலளித்தார் டிரம்ப். “எங்கள் விருந்தினர்களை நீங்கள் சங்கடப்படுத்த வேண்டாம்,” எனவும் அவர் குறிப்...








