இந்தியா-அமெரிக்கா உறவு முன்னெப்போதையும் விட வலுவாக உள்ளது-அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ
இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய மக்களுக்கு அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோருக்கு இடையிலான தனிப்பட்ட உறவின் காரணமாக, இந்தியா-அமெரிக்கா இடையிலான உறவு தொடர்ந்து வளர்ந்து வருவதாகவும், அது முன்னெப்போதையும் விட வலுவாக இருப்பதாகவும் அவர் தனது செய்தியில் குறிப்பிட்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, இரு நாடுகளையும் மற்றும் பரந்த இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தையும் பாதுகாப்பானதாகவும், வலுவானதாகவும், அதிக வளம் மிக்கதாகவும் மாற்றி வருவதாக அவர் மேலும் கூறினார். இரு நாட்டு மக்களுக்கும் இடையிலான ஆழமான நட்பு மற்றும் குடும்ப உறவுகள், புதுமையான, உறுதியான மற்றும் எதிர்கால நோக்குடைய ஒரு கூட்டாண்மைக்கு அடித்தளமாக அமைகின்றன என்றும் அவர் தெரிவித்தார். இ...









