அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அமெரிக்கா–தென் கொரியா கூட்டணி.
தென்கொரியா மற்றும் அமெரிக்கா இணைந்து அணுசக்தி மூலம் இயங்கும் அதிநவீன தாக்குதல் நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்கும் மிகப்பெரிய பாதுகாப்பு ஒப்பந்தத்தை இறுதி செய்துள்ளன. வட கொரியாவின் அணு அபாயமும், சீனாவின் விரிவாக்கக் கொள்கையும் அதிகரித்து வரும் சூழலில் இவ்வொப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது.
வெள்ளை மாளிகை வியாழக்கிழமை வெளியிட்ட அறிக்கையில், தென் கொரியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பல்களை உருவாக்க அனுமதி பெறுகிறது என்றும், எரிபொருள் உள்ளிட்ட அணு தொடர்பான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இருநாடுகளும் நெருக்கமாக இணைந்து செயல்பட ஒப்புக்கொண்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் இருநாடுகளின் பாதுகாப்பு கூட்டுறவில் ஒரு வரலாற்றுச் சுனாமியாகக் கருதப்படுகிறது.
வர்த்தகச்சண்டைக்கு பிறகு ஏற்பட்ட முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தம்:
டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் தென் கொரியாவிற்கு விதித்த 25% வரியை, சுமா...








