விலங்குகளை கல்லாக மாற்றும் தான்சானியாவின் நேட்ரான் ஏரி!
கிழக்கு ஆப்பிரிக்காவின் தான்சானியாவில் அமைந்துள்ள நேட்ரான் ஏரி (Lake Natron) உலகின் மிகவும் மர்மமான இயற்கை அதிசயங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. பொதுவாக காட்சி தரும் அழகிய ஏரிகள் உயிர்களுக்குத் தஞ்சம் அளிப்பவை. ஆனால், நேட்ரான் ஏரி அதற்கு முற்றிலும் மாறானது. இந்த ஏரியில் விழும் விலங்குகள், குறிப்பாக பறவைகள், கல்லைப் போன்ற உறைந்த எச்சங்களாக மாறி விடுகின்றன என்ற அதிர்ச்சி தகவல் வெளிப்பட்டுள்ளது.
கல்லாக மாற வைக்கும் ஏரியின் விஞ்ஞான காரணம்:இந்த மாற்றம் மந்திரம் அல்லது புராண சம்பவம் அல்ல. ஏரியின் நீரில் காணப்படும் மிக அதிகமான காரத்தன்மை (high alkalinity) மற்றும் சோடியம் கார்பனேட் (Sodium Carbonate) எனும் உப்பு காரணமாகும். ஏரியில் விழும் உயிரினங்களின் உடல்களில் உள்ள நீரும் கொழுப்பும் வேகமாக உறிஞ்சப்பட்டு, அவற்றின் உடல் உலர்ந்து மிகக் கடினமான கல் போன்ற வடிவமாக மாறுகிறது. குறிப்பாக பறவைகள...









