4,500 கி.மீ. நீளத்தில் 66 பில்லியன் மரங்கள்: சீனாவின் ‘கிரேட் கிரீன் வால்’
வட சீனாவை மெல்ல விழுங்கிக் கொண்டிருக்கும் கோபி மற்றும் தக்லமக்கான் பாலைவனங்களின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள, சீனா கடந்த நான்கு தசாப்தங்களுக்கு மேலாக ஒரு மாபெரும் சுற்றுச்சூழல் போரில் ஈடுபட்டு வருகிறது. மனிதகுல வரலாற்றில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய சுற்றுச்சூழல் முயற்சிகளில் ஒன்றாகக் கருதப்படும் ‘பசுமைச் சுவர்’ (Great Green Wall) திட்டம், இன்று உலகின் கவனத்தை ஈர்க்கும் அளவிற்கு வளர்ந்துள்ளது.
47 ஆண்டுகள் நீண்ட பசுமை முயற்சி:1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம், அதிகாரப்பூர்வமாக Three-North Shelterbelt Program என அழைக்கப்படுகிறது. வட சீனா, வடமேற்கு சீனா மற்றும் வடகிழக்கு சீனா ஆகிய மூன்று முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இந்தத் திட்டத்தின் நோக்கம், மங்கோலியா எல்லை முதல் கஜகஸ்தான், கிர்கிஸ்தான் வரையிலான வறண்ட நிலப்பகுதிகளில் ஒரு பரந்த பசுமை அடுக்கை உருவாக்குவதாகும்.
இதுவரை, சீன...









