பிரிட்டன் ராணுவத்தில் ‘சீக்கிய படைப்பிரிவு’ அமைக்க அதன் அரசு பரிசீலனை!
பிரிட்டன் ராணுவத்தில், நேபாள வீரர்களுக்கான 'கூர்க்கா' படைப்பிரிவை போலவே, சீக்கிய சமூகத்துக்கான தனி படைப்பிரிவு ஒன்றை உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கை மீண்டும் முன்னிலை பெறுகிறது. இக்கோரிக்கை தற்போது பிரிட்டன் அரசின் கவனத்திற்கும் வந்துள்ளது. முக்கியமாக, புதிய தொழிலாளர் கட்சி ஆட்சி இதை பரிசீலிக்கத் தயாராக உள்ளதாக ராணுவ அமைச்சர் உறுதிபட தெரிவித்துள்ளார்.
சீக்கியர்கள், 1840-ஆம் ஆண்டு காலத்திலிருந்தே பிரிட்டிஷ் ராணுவத்தில் சேவை புரிந்து வருகின்றனர். குறிப்பாக முதல் மற்றும் இரண்டாம் உலகப் போரில், அவர்கள் அளித்த தியாகம், வீரத்துக்கான புகழ் உலகளவில் பரவியது. ஆயிரக்கணக்கான சீக்கியர்கள் போர்க்களங்களில் பங்கேற்று, பலர் உயிர்தியாகமும் செய்துள்ளனர்.
இந்த கோரிக்கையை சமீபத்தில் பிரிட்டிஷ் பார்லிமென்டில் எழுப்பியவர் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த எம்.பி. குல்தீப் சிங் சஹோட்டா. அவர் தனது உரையில்...









