இஸ்ரோவின் 2024 கடைசி பணி இந்தியாவை “எலைட் குளோபல் ஸ்பேஸ் கிளப்” பில் சேர்க்கும்!
விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் திறனைப் பெற்ற உலகின் 4வது நாடாக இந்தியா மாறும்.
2024 ஆம் ஆண்டின் இஸ்ரோவின் கடைசிப் பணியான "ஸ்பேஸ் டாக்கிங் பரிசோதனை" இந்தியாவை எலைட் குளோபல் ஸ்பேஸ் கிளப் ஸ்பாடெக்ஸில் சேர்க்கும். ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து டிசம்பர் 30 ஆம் தேதி இந்திய நேரப்படி இரவு 9:58 மணிக்கு இந்த பயணம் புறப்பட திட்டமிடப்பட்டுள்ளது.
இதுவரை அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா(இந்த மூன்று நாடுகள்) மட்டுமே இரண்டு விண்கலங்கள் அல்லது செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைக்கும் திறனைக் கொண்டுள்ளன. இந்தியாவின் 2024 ஆம் ஆண்டின் இந்த கடைசி பணிக்கு SpaDeX என்று பெயரிடப்பட்டது. இந்த பணிக்கு பிறகு விண்வெளியில் விண்கலங்களை இணைக்கும் திறனைப் பெற்ற உலகின் 4வது நாடாக இந்தியா மாறும்.
இஸ்ரோவின் இந்த ஏவுதல் பிஎஸ்எல்வி-சி60 ராக்கெட்...