நவீன உளவாளிகளின் ஆயுதங்கள்!
குறியாக்கம்(Encryption), சுய-நீக்க செய்திகள்(Self Deleting Messages), மறைந்து போகும் செய்திகள் (Disappearing Messages), இன்ஸ்டாகிராம், டெலெக்ராம் செய்திகள் நவீன உளவாளிகளின் ஆயுதங்களாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
உளவுத்துறை செயல்பாட்டாளர்களுடன் முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொண்டதாகக் கூறி ஹரியானாவின் ஹிசாரைச் சேர்ந்த யூடியூபர் (Youtuber) ஜோதி மல்ஹோத்ரா கைது செய்யப்பட்டிருப்பது இந்த பல விடயங்களை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.
ஜோதி, 2023 ஆம் ஆண்டு புது தில்லியில் உள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தில் பணியாற்றும் டேனிஷ் என்றும் அழைக்கப்படும் எஹ்சான்-உர்-ரஹீமை சந்தித்தார். டேனிஷ் ஜோதியின் கையாளுநராக செயல்பட்டதாகவும், பல பாகிஸ்தான் புலனாய்வு செயல்பாட்டாளர்களுக்கு (PIOக்கள்) அறிமுகப்படுத்தியதாகவும் கூறப்படுகிறது. டேனிஷ், மே 13, 2025 அன்று இந்தியாவிலிருந்து வெளியேற்றப்பட்டார்....









