தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம் – ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்
தமிழகத்தில் இயங்கும் ஸ்பின்னிங் மில்கள் வணிக நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளன. அதன் முக்கியக் காரணங்களில் ஒன்றாக, இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India - CCI) தமிழகத்திற்கு பஞ்சு விநியோகம் செய்ய மறுப்பது என ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கடும் புகார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா முழுவதும் செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்களில், 40 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் மையமாக திகழ்கின்றன. ஆனால் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி முழுமையான தேவைச்சுமையை சமாளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, சில மில்கள் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன.
மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) பெரிதும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, இந்திய பருத்தி கழகம், அதிக விலையில் பருத்தி க...









