தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் சொத்துக்களை பாதிக்கப்பட்ட வங்கிகளுக்கு பிரித்துக் கொடுக்கும் பணியை, அமலாக்கத் துறை(ED) துவங்கி உள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியில் மோசடி செய்து வெளிநாடு தப்பிய தொழிலதிபர் மெஹுல் சோக்சியின் 125 கோடி ரூபாய் மதிப்புடைய சொத்துகளை பாதிக்கப்பட்டவர்களுக்காக பிரித்துவழங்கும் பணியை அமலாக்கத்துறை (ஈ.டி.) தொடங்கியுள்ளது.
2014 முதல் 2017 வரை, மும்பையில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக் கிளையில், குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த வைர வியாபாரி நிரவ் மோடி மற்றும் அவரது உறவினர் மெஹுல் சோக்சி, 13,000 கோடிக்கு மேல் கடன் பெற்று, திருப்பிச் செலுத்தாமல் வெளிநாடு தப்பினர். இதில், நிரவ் மோடி 2019 முதல் லண்டனில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹுல் சோக்சியின் இருப்பிடம் கரீபியன் தீவு நாடான ஆன்டிகுவா மற்றும் பார்புடாவில் இருக்கலாம் என கூறப்படுகிறது. இருவரையும் நாடு கடத்த மத்திய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது.
மெஹுல் சோக்சி மட்டும் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 6,097.63 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்...









