8 மணி நேரம் முன்பே ரயில்வே ‘ரிசர்வேஷன் சார்ட்’.
ரயில்வே பயணிகள் தங்கள் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளின் நிலை மற்றும் ஆசன ஒதுக்கீட்டு விவரங்களை முன்கூட்டியே அறிந்துகொள்வதற்கான நடவடிக்கையாக, ரயில்வே அமைச்சகம் முக்கியமான மாற்றத்தை அறிவித்துள்ளது. இனி, ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்திற்கு முன்பே 'ரிசர்வேஷன் சார்ட்' வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுவரை, ஒரு ரயிலுக்கான முன்பதிவு அட்டவணை (Reservation Chart) ரயில் புறப்படும் 4 மணி நேரத்திற்கு முன் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தது. இதனால், சில பயணிகள் தங்கள் இடம் உறுதி செய்ய முடியாமல், குழப்ப நிலை ஏற்படுவதாக பல்வேறு புகார்கள் வந்துள்ளன.
இந்தப் புகார்கள் மற்றும் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, ரயில்வே வாரியம், முன்பதிவு சார்ட்டை மேலும் முன்கூட்டியே வெளியிட பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரை, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அவர்களின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டபோது, அவர...








