ஜூலை 1 முதல் ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவில் முக்கிய மாற்றம்!
இந்திய ரயில்வே, தட்கல் டிக்கெட் முன்பதிவு முறையில் சில முக்கிய மாற்றங்களை ஜூலை 1 ஆம் தேதி முதல் அமல்படுத்த உள்ளது. புதிய விதிகளின்படி, IRCTC இணையதளம் மற்றும் மொபைல் செயலியில் தட்கல் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யும் பயனர்கள், தங்களது IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருக்க வேண்டும்.
மத்திய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பயணிகள் உண்மையில் டிக்கெட்டில் குறிப்பிடப்பட்ட நபர்களே என உறுதி செய்வதற்கும், பாதுகாப்பு காரணங்களுக்கும் இந்த மாற்றம் கொண்டு வரப்படுகிறது. தவறான முன்பதிவுகளைத் தடுக்கவும், பயணிகள் நலனுக்காக புதிய வசதிகளை வழங்கும் நோக்கத்திலும் இது அமல்படுத்தப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 1 முதல்:
IRCTC இணையதளம், செயலி வழியாக தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய, பயனர்கள் IRCTC கணக்குடன் ஆதார் எண்ணை இணைத்திருப்பது கட்டாயம்.
முதலாவது 30 நிமிடங்கள் – தட்...









