தேசிய விண்வெளி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.
ஆகஸ்ட் 23, 2023, இந்த நாள், சந்திரயான்-3 மிஷன் சந்திர மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை பாதுகாப்பாகவும் மென்மையாகவும் தரையிறக்கிய நாள். இந்த சாதனையை கௌரவிக்கும் வகையில், கடந்த வருடம் இந்திய அரசு ஆகஸ்ட் 23 ஆம் தேதியை "தேசிய விண்வெளி தினம்" என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. இன்று இரண்டாவது தேசிய விண்வெளி தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. பிரக்யான் ரோவர் சந்திரனில் நிலைநிறுத்தப்பட்டதையும் நினைவுகூரும் வகையில் அமைந்துள்ளது.
2023 ஆம் ஆண்டு சந்திரயான்-3 மிஷன் சந்திர மேற்பரப்பில் விக்ரம் லேண்டரை பாதுகாப்பாகவும் மென்மையாகவும் தரையிறக்கியதன் மூலம், இந்தியா சந்திரனில் தரையிறங்கிய நான்காவது நாடாகவும், சந்திரனின் தெற்கு துருவப் பகுதிக்கு அருகில் தரையிறங்கிய முதல் நாடாகவும் ஆனது. மென்மையான தரையிறக்கத்தைத் தொடர்ந்து பிரக்யான் ரோவரின் வெற்றிகரமான நிலைநிறுத்தம் நடந்தது. தரையிறங்கும் இடத்திற...









