எப்.ஐ.ஆர்.,(FIR) கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை: சென்னை போலீஸ் கமிஷனர் உறுதி!
சென்னை அண்ணா பல்கலையில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கையை (எப்.ஐ.ஆர்.,) வெளியில் கசிய விட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் கூறியுள்ளார்.
பத்திரிக்கை நிருபர்களை சென்னையில் சந்தித்த போது அவர் கூறியதாவது: "சம்பவம் நடந்த பிறகு, பாதிக்கப்பட்டவர் என்ன சொல்கிறாரோ அதனை அப்படியே பதிவு செய்வது தான் எப்.ஐ.ஆர்., கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்தேகப்பட்ட நபர்களை அழைத்து விசாரித்தோம். அறிவியல் பூர்வமான விசாரணைக்கு பிறகு 25ம் தேதி காலை குற்றவாளியை கைது செய்தோம். அவன் தான் குற்றத்தை செய்தான் என்பதை உறுதி செய்து, சிறையில் அடைத்தோம். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் எப்.ஐ.ஆர்., இணையத்தில் பதிவேற்றம் செய்யும் போது அது தானாக 'பிளாக்' ஆகிவிடும். ஐ.பி.சி.,க்கு பதில் பி.என்.எஸ்., சட்டத்தில் வழக்குப்பதிவு செய்கிறோம்....









