ஹேஷ்டேக் பயன்பாட்டை நிறுத்த வேண்டும் என எக்ஸ் சமூக வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க் அறிவுறுத்தியுள்ளார்.
![](https://puduyugam.com/wp-content/uploads/2024/12/hashtag-1024x683.jpg)
சமூக வலைதளங்களில் உள்ள தலைப்புகளை விவரிக்க பயன்படுத்தப்படும் குறிச்சொல்லான ஹேஷ்டேக், 2007ஆம் ஆண்டு டுவிட்டர் தளத்தில் உருவானது. ரசிகர்கள் செயல்பாடுகள், விசேஷங்கள் போன்றவற்றை வெளிப்படுத்த இது பயன்பட்டது. தொடர்ந்து, டுவிட்டர் தளத்தை தொழிலதிபர் எலான் மஸ்க் வாங்கி, பல மாற்றங்களை செய்தார். டுவிட்டரின் அடையாளமான குருவி சின்னத்தை மாற்றி, அதன் பெயரை ‘எக்ஸ்’ என மாற்றினார். எனினும், பல பயனர்கள் அதை இன்னும் டுவிட்டர் எனவே அழைக்கின்றனர்.
எலான் மஸ்க், ஹேஷ்டேக்கள் இனி சிஸ்டத்திற்கு தேவையில்லை என்றும் அவை அழகாகத் தெரியவில்லை என்றும் தனது சமூகவலைதள பதிவில் தெரிவித்தார். “ஹேஷ்டேக்குகளைப் பயன்படுத்துவதை நிறுத்துங்கள். அவை இனி தேவையில்லை,” என அவர் குறிப்பிட்டார்.