“பத்திரிகையாளர் மன்றத்தின் கோரிக்கையை ஏற்று, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இரு மடங்காக உயர்த்தி வழங்கி உத்தரவிட்டுள்ள மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” – சென்னை பத்திரிகையாளர் மன்றம்.
சென்னை பத்திரிகையாளர் மன்றத்திற்கு புதிதாக பொறுப்பேற்றுள்ள நிர்வாகிகள் அனைவரும் 17.12.2024 அன்று சென்னை தலைமை செயலகத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களை சந்தித்து சில கோரிக்கைகளை முன் வைத்தனர். கோரிக்கைகளில் ஒன்றான, பத்திரிகையாளர் குடும்ப நல நிதியிணை இன்று மடங்காக உயர்த்தி வழங்க வேண்டும் என்பது ஏற்கப்பட்டு அதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. இதன்படி 20 ஆண்டுகள் பணியாற்றி, பணியின் போது உயிரிழக்கும் பத்திரிகையாளரின் குடும்பத்திற்கு இதுவரை 5 லட்சம் ருபாய் குடும்ப நல நிதியாக வழங்குபட்டு வந்ததை ரூ 10 லட்சமாக உயர்த்தி வழங்க அரசாணை பிறப்பித்தப்பட்டுள்ளது. அதே போல் 15 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ 7.5 லட்சமாகவும், 10 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ 5 லட்சமாகவும், 5 ஆண்டுகள் பணியாற்றியவர்களுக்கு ரூ 2.5 லட்சமாகவும் வழங்கப்படும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.
பத்திரிகையாளரின் நலனைக் கருதி கோரிக்கை வாய்த்த மறுநாளே அதை நிறைவேற்றி ஆணை பிறப்பித்த தமிழக முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவிக்கிறது சென்னை பத்திரிக்கையாளர் மன்றம்.