சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கிலுக்கு ஐ.நா. உயர் விருது!
சுற்றுச்சூழல் நிபுணர் மாதவ் காட்கில் (82) மேற்குத் தொடர்ச்சி மலை பாதுகாப்பிற்காக ஆற்றிய குறிப்பிடத்தக்க சேவையினால், ஐக்கிய நாடுகள் சபையின் உயரிய சுற்றுச்சூழல் விருதான சாம்பியன்ஸ் ஆப் தி எர்த் விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இந்த ஆண்டிற்கான விருது பெறுபவர்களின் பட்டியலில் இடம் பெற்ற ஒரே இந்தியராக மாதவ் காட்கில் இருக்கிறார். அவர் இந்திய அரசால் அமைக்கப்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழுவின் தலைவராக இருந்தார். அந்த குழுவின் அறிக்கையின் அடிப்படையில் பல பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
விருதைப் பற்றி கருத்து தெரிவிக்கும் மாதவ் காட்கில் கூறியதாவது:"சரியானவற்றிற்காக உறுதியாக நின்றதில் மகிழ்ச்சி அடைகிறேன். மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் நிபுணர் குழு தயாரித்த அறிக்கை நேர்மையான மற்றும் தெளிவான கருத்துக்களால் நிரம்பியுள்ளது. இது மக்களுக்குப் புரிந்துக...









