இஸ்ரேலுக்கு இராணுவ, பொருளாதார, வரலாற்று மற்றும் மத ரீதியாக மிக முக்கியமான இடமாக விளங்குகிறது “எர்மோன் மலை“.
சிரியாவில் நிலவும் குழப்பத்தை பயன்படுத்தி, கடந்த 50 ஆண்டுகளில் முதல் முறையாக இஸ்ரேலிய இராணுவப் படைகள் சிரியாவுக்குள் நுழைந்து, இஸ்ரேல் எல்லையில் இருந்து 10 கிமீ தொலைவில் அமைந்துள்ள எர்மோன் மலை (Mount Hermon) உள்ளிட்ட முக்கியப் பகுதிகளைக் கைப்பற்றியது.
சிரியா-லெபனான் எல்லையில், சிரியாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள இந்த எர்மோன் மலை, அதன் நாட்டின் மிக உயரமான மலைகளில் ஒன்றாகும். சிரியாவின் நிலப்பரப்பில் உள்ள உயர்ந்த மலைகளில் ஏர்மோன் மலை மிக முக்கியமானது ஆகும்.