தேடப்படும் சீன ஹேக்கரைப் பற்றி தகவல் கொடுத்தால் $10 மில்லியன் பரிசு வழங்குகிறது அமெரிக்கா நீதித்துறை!
சிச்சுவான் சைலன்ஸ் இன்ஃபர்மேஷன் டெக்னாலஜி நிறுவனமும் அதன் ஊழியர்களில் ஒருவரான குவான் தியான்ஃபெங், ஏப்ரல் 2020 இல் உலகெங்கிலும் உள்ள ஆயிரக்கணக்கான நிறுவனங்களால் இயக்கப்படும் 80,000 க்கும் மேற்பட்ட ஃபயர்வால்களுக்கு தீங்கிழைக்கும் மென்பொருளைப் பயன்படுத்தி தாக்குதல் நடத்தினர்.இவர்களை கைது செய்வதற்கு வழிவகுக்கும் தகவல்களுக்கு அமெரிக்கா $ 10 மில்லியன் பரிசு வழங்க முன்வந்துள்ளது. 30 வயதான குவான் சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் வசிப்பதாக நீதித்துறை நம்புகிறது. அந்த நிறுவனத்தின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளதாக அமெரிக்க கருவூலத் துறை அறிவித்துள்ளது. குற்றப்பத்திரிகையின்படி, சிச்சுவான் சைலன்ஸில் உள்ள குவானும் அவரது கூட்டாளிகளும் யு.கே-வை தளமாகக் கொண்ட சைபர் செக்யூரிட்டி நிறுவனமான சோஃபோஸ் விற்ற ஃபயர்வால்களில் உள்ள பாதிப்பை பயன்படுத்தி அமெரிக்க கணினி அமைப்புகளின் மீது தாக்குதல் நடத்தினர். "பிரதி...









