Saturday, January 18பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

இறுதிக்கட்டத்தில் சிட்னி டெஸ்ட் மேட்ச் – போராடும் இந்திய அணி!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சிட்னி டெஸ்ட் ஆட்டம் பரபரப்பான இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. தொடரை சமநிலையாக்கவேண்டும் என்ற உறுதியுடன், இந்திய வீரர்கள் வெற்றிக்காக போராடி வருகின்றனர்.

இந்தியா, ஆஸ்திரேலியாவில் நடைபெறும் ஐந்து போட்டிகள் கொண்ட ‘பார்டர்-கவாஸ்கர்’ டிராபி டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் நான்கு டெஸ்ட் முடிவில், இந்தியா 1-2 என பின்தங்கியுள்ளது. தற்போது, கடைசி மற்றும் ஐந்தாவது டெஸ்ட் சிட்னியில் நடந்து வருகிறது.

முதல் இன்னிங்ஸில் இந்தியா 185 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தது. ஆஸ்திரேலியா, முதல் நாள் முடிவில் 9/1 ரன்கள் எடுத்து, 176 ரன்கள் பின்தங்கியது. இரண்டாவது நாளில், ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 181 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. 2வது நாள் முடிவில், இந்தியா 6 விக்கெட்டுகளை இழந்து 141 ரன்கள் எடுத்தது.

இன்று (ஜனவரி 5) மூன்றாவது நாள் ஆட்டத்தில், ஆஸ்திரேலிய பவுலர்கள் இன்னும் சிறப்பாக பந்து வீசி, இந்திய அணியின் விக்கெட்டுகளை தொடர்ந்து வீழ்த்தினர். இதனால், இந்திய அணி 39.5 ஓவர்களில் 157 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி, ஆஸ்திரேலியாவுக்கு 162 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது.

இந்த இலக்கை நோக்கி ஆஸ்திரேலிய அணி தற்போது பேட்டிங் செய்து வருகிறது. பிரசித் கிருஷ்ணா சிறப்பாக பந்து வீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். தற்போது ஆஸ்திரேலிய அணி 13.4 ஓவர்களில் 74 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகளை இழந்துள்ளது.

சிட்னி டெஸ்ட், பரபரப்பான நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், மீதமுள்ள விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக இந்திய வீரர்கள் போராடி வருகின்றனர்.