கனடா பிரதமர் பதவிக்கான போட்டியில் அனிதா இந்திரா ஆனந்த்: அவரது தாத்தா இந்திய சுதந்திர போராட்ட வீரர்
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியை சேர்ந்த அனிதா ஆனந்த்.
கனடா பிரதமர் பதவிக்கு போட்டியிடும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அனிதா இந்திரா ஆனந்தின் தந்தைவழி தாத்தா வெள்ளலூர் அண்ணாசாமி சுந்தரம், இந்திய சுதந்திரப் போராட்ட வீரராக பெருமை பெற்றவர். கோவை மாவட்டம் வெள்ளலூரை பூர்வீகமாகக் கொண்ட அனிதா, தமிழர் பாரம்பரியத்தை உலக அரங்கில் உயர்த்தியவராகக் கருதப்படுகிறார்.
ஜஸ்டின் ட்ரூடோவின் பதவி விலகல்:கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது கட்சித் தலைவர் மற்றும் பிரதமர் பதவிகளில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், அடுத்தகட்டத்துக்கான தலைவருக்கான தேடல் தொடங்கியுள்ளது. புதிய பிரதமரை தேர்வு செய்யும் வரை, அவர் பதவியில் தொடரக்கூடும்.
இந்திய வம்சாவளி போட்டியாளர்கள்:பிரதமர் பதவிக்கான ரேசில் இரண்டு இந்திய வம்சாவளியினர் முன்னிலையாக இருக்கின்றனர். கர்நாடகாவைச் சேர்ந்த சந்திரா ஆர்யா...









