கொல்கத்தாவில் மருத்துவ மாணவி மரணம், மீண்டும் அதிர்ச்சி!
மேற்கு வங்கத்தில், ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த ஒரு மருத்துவ மாணவி, தன் வீட்டில் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியின் தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. இதன் கீழ், கோல்கட்டாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் தேதி, இங்கு பணிபுரிந்த 31 வயது பெண் மருத்துவர், மருத்துவமனை வளாகத்தில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட போலீஸ் நண்பர்கள் குழுவின் தன்னார்வலர் சஞ்சய் ராய்க்கு, சமீபத்தில் கோல்கட்டா நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்தது.
இந்தச் சூழலில், அதே மருத்துவக் கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர், தனது வீட்டில் மர்மமான முறையில்...









