மூன்று புலிகள் மரணம்: மர்மம் விலகியது!
கேரள மாநிலத்தில் மூன்று புலிகள் உயிரிழந்ததற்கான காரணம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வனத்துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு மேற்கொண்ட விசாரணையில், ஆண் புலியின் தாக்குதலே இதற்குக் காரணம் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
வயநாடு பஞ்சரக்கோடு பகுதியில், 45 வயதான ராதா என்ற பெண் சில தினங்களுக்கு முன்பு புலி தாக்கி உயிரிழந்தார். இதையடுத்து, வயநாடு வைதிரி பகுதியில் உள்ள காபி தோட்டத்தில் அழுகிய நிலையில், ஒரு புலியின் உடல் மீட்கப்பட்டது. அது ராதாவை கொன்ற புலி என அடையாளம் காணப்பட்டது.இந்த சம்பவத்திற்குப் பிறகு, மேலும் மூன்று புலிகள் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டன. வயநாடு குறிச்சியாடு வனப்பகுதியில் இரண்டு புலிகளின் உடல்கள் ரோந்து பணியில் இருந்த வனத்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன. அருகில் உள்ள காபி தோட்டத்தில் மூன்றாவது புலியின் உடலும் மீட்கப்பட்டது.இந்த தொடர்ச்சியான உயிரிழப்புகளுக்கான...









