புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து கோரி 16வது முறையாக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றம்
புதுச்சேரி சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச் 10ம் தேதி கவர்னர் உரையுடன் தொடங்கியது. மார்ச் 12ம் தேதி, நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ரூ.13,600 கோடி மதிப்பிலான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். தொடர்ந்து கவர்னர் உரைக்கு நன்றி தெரிவித்து, பட்ஜெட்டின் மீதான விவாதம் நடைபெற்றது.
நிறைவு நாளான நேற்று, புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. எம்.எல்.ஏக்கள் நாஜிம், அனிபால்கென்னடி, செந்தில்குமார், காங்கிரஸ் எம்.எல்.ஏ வைத்தியநாதன், சுயேச்சை எம்.எல்.ஏ நேரு ஆகியோர் தனிநபர் தீர்மானங்களை முன்வைத்து பேசினர்.
மாநில அந்தஸ்துக்கான தொடர்ச்சியான முயற்சிபுதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என இதற்கு முன்பு 15 முறை சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசிற்கு அனுப்பப்பட்டிருந்தாலும், இதுவரை கிடைக்கவில்லை. தற்போது, ப...









