“தாக்குதல் நடத்தினால் பதிலடி கொடுப்போம்” – ஈரான் பாதுகாப்பு அமைச்சரின் எச்சரிக்கை
மேற்காசிய நாடான இஸ்ரேல், காசா பகுதியில் தலைமையகம்கொண்ட ஹமாஸ் அமைப்பின் செயல்பாடுகளை கட்டுப்படுத்தும் முயற்சியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு பதிலாக, ஹமாஸ் ஆதரவு பெற்றதாகக் கூறப்படும் யேமன் நாட்டைச் சேர்ந்த ஹவுதி அமைப்பினர், இஸ்ரேலின் முக்கிய நகரமான டெல் அவிவில் அமைந்துள்ள பென்குரியன் சர்வதேச விமான நிலையத்தை குறிவைத்து ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதல், யேமனில் இருந்து நடைப்பெற்றதாயும், அது திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டதாயும் கூறப்படுகிறது.
இந்த நிகழ்வுக்கு பதிலளிக்க, இஸ்ரேல் அரசு "ஏழு மடங்கு கடுமையான தாக்குதல் நடைபெறும்" என வலியுறுத்தியுள்ளது. மேலும், ஹவுதி அமைப்புக்கு எதிராக விரைவில் மிகப் பெரிய ரீதியில் தாக்குதல் நடத்தப்படவிருக்கிறது என்றும், அவர்கள் செயல்படுகிற எந்த இடமும் இஸ்ரேலின் கண்காணிப்பில் உள்ளதெனவும், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்ய...









