அமிர்தசரசில் குண்டுவெடிப்பு, போலீசார் தீவிர விசாரணை!
அமிர்தசரஸ், பஞ்சாப் : பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரசில் நேற்று முன்தினம் (மே 25) இரவு நடந்த வெடிகுண்டு சம்பவம் பொதுமக்களிடம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இதில் ஒருவர் கடுமையாக காயமடைந்த நிலையில், போலீசார் பல கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அமிர்தசரசின் முக்கியமான பகுதி ஒன்றில் பல சத்தத்துடன் குண்டு வெடித்தது. சம்பவத்தின் போது அருகில் இருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து பதற்றத்தில் சிதறியோடினர். இது திட்டமிட்ட தாக்குதலா? அல்லது விபத்தா? என்ற கேள்வி எழுந்துள்ளது. குண்டுவெடிப்பில் ஒருவர் பலத்த காயம் அடைந்தார். அவரை உடனடியாக மீட்ட போலீசார், ஆம்புலன்ஸ் மூலம் அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தற்போது அவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார் என மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
புதிய தகவல்களின்படி, காயம் அடைந்த நபர் தானே வெடிகுண்டை கையாள முயற்சித்துள்ளார் ...









