பாஜ கூட்டணியில் இருந்து டிடிவி தினகரன் விலகல் : தமிழக அரசியலில் பரபரப்பு!
தமிழக அரசியலில் புதிய திருப்பமாக, அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
திமுகவுக்கு எதிராக அதிமுக–பாஜக தலைமையில் மாநிலத்தில் மாபெரும் கூட்டணியை அமைக்க முயற்சிகள் தீவிரமாக நடந்துவருகின்றன. அந்த முயற்சிகளில் அமமுகவும் ஒரு முக்கிய அங்கமாக இருந்து வந்தது. எனினும், சமீபகாலமாக கூட்டணியில் கருத்து வேறுபாடுகள் வெளிப்படத் தொடங்கியிருந்தன.
இந்நிலையில், அதிமுக உரிமை மீட்பு குழுவை தலைமை தாங்கி வரும் ஓ.பன்னீர்செல்வம் (ஓபிஎஸ்), சில நாட்களுக்கு முன்பு, தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (என்டிஏ) இருந்து விலகுவதாக அறிவித்தார். அந்த அறிவிப்பு தமிழக அரசியலில் பெரும் கவனம் ஈர்த்தது.
அதனைத் தொடர்ந்து, இன்று டிடிவி தினகரனும் அதிகாரப்பூர்வமாக பாஜக கூட்டணியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். இந்த முடிவு, வரவிருக்கும் த...









