தமிழகத்தில் கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு ‘ஆன்லைன் நடைச்சீட்டு’ கட்டாயம் – கனிம வளத்துறை புதிய உத்தரவு
தமிழகத்தில் ஜல்லி மற்றும் எம்-சாண்ட் உள்ளிட்ட கட்டுமானப் பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களுக்கு இனி ஆன்லைன் நடைச்சீட்டு (Online Transit Pass) கட்டாயம் என கனிம வளத்துறை கடும் உத்தரவு பிறப்பித்துள்ளது.
தற்போது தமிழகம் முழுவதும் 3,000க்கும் மேற்பட்ட தனியார் கருங்கல் குவாரிகள் செயல்பட்டு வருகின்றன. இங்கு வெட்டப்படும் கருங்கற்கள், கிரஷர் ஆலைகள் மூலமாக நொறுக்கப்பட்டு ஜல்லியாகவும், அதேபோல் சுத்திகரிக்கப்பட்டு எம்-சாண்ட் (M-Sand) ஆகவும் தயாராகின்றன. இப்பொருட்கள் கட்டுமானத் தேவைகளுக்காக பல்வேறு இடங்களுக்கு அனுப்பப்படுகின்றன.
இந்த வகையான கனிமங்களின் சுரங்க வேலைகளை கண்காணிக்க, இதுவரை ‘மேனுவல்’ முறையில் நடைச்சீட்டுகள் (Transit Passes) வழங்கப்பட்டு வந்தன. ஆனால், இந்த முறையில் பல குறைகளை சந்தித்து வந்தது. குறிப்பாக, ஒரே நடைச்சீட்டை பலமுறை பயன்படுத்தி அதிக அளவிலான கனிமங்களை சட்டவிரோதமாக...









