26 கோடி டன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் நாட்டிற்கு உள்ளது: எரிவாயு அமைச்சகம்
26 கோடி டன் கச்சா எண்ணெயைச் சுத்திகரிக்கும் திறன் நாட்டிற்கு உள்ளது என்று கூறியுள்ள அரசு, வதந்திகளை நம்புவதை நிறுத்தி, பீதியுடன் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்குமாறு குடிமக்களை வலியுறுத்தியுள்ளது.
நேற்று புது தில்லியில் நடைபெற்ற, மேற்கு ஆசியாவின் சமீபத்திய நிகழ்வுகள் குறித்த அமைச்சகங்களுக்கு இடையேயான விளக்கக் கூட்டத்தில் உரையாற்றிய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் இணைச் செயலாளர் சுஜாதா சர்மா, பெட்ரோல்-டீசல் விலை உயர்வு குறித்த வதந்திகளுக்கு மத்தியில், பெட்ரோல் மற்றும் டீசல் விலைகளில் எந்த உயர்வும் இல்லை என்று தெளிவுபடுத்தினார்.
பிஎன்ஜி (PNG) விரிவாக்கம் குறித்துப் பேசிய அவர், அரசு இதில் கவனம் செலுத்தி வருவதாகவும், இது தொடர்பாக ஒரு அரசிதழ் அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் கூறினார். இதன் முக்கிய நோக்கம், அனைத்து மாநிலங்களிலும் பிஎன்ஜி இணைப்புகள் தொடர்பான விண்ணப்பக்...









