சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நிலையில் பாகிஸ்தானுக்கு இந்தியா எச்சரிக்கை!
தாவி நதியில் ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கான இந்திய உயர் தூதரகம் மூலம் பாகிஸ்தானுக்கு நேற்று, ஞாயிற்றுக்கிழமை இந்திய தேசிய நெடுஞ்சாலைத் துறை தகவல் அளித்தது. இந்த வழிமுறையைப் பயன்படுத்தி பாகிஸ்தானுக்கு வெள்ள நிலைமை குறித்து உயர் தூதரகம் மூலம் எச்சரிப்பது இதுவே முதல் முறை. பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ், சிந்து நதி ஆணையர் மூலம் தகவல்கள் பகிரப்படுகின்றன.
ஜம்மு மற்றும் காஷ்மீரில் கனமழை காரணமாக கடுமையான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது, 24 மணி நேரத்தில் 190.4 மிமீ மழை பதிவாகியுள்ளது, இது ஒரு நூற்றாண்டில் ஆகஸ்ட் மாதத்தில் இரண்டாவது அதிகபட்ச மழையாகும். ஜானிபூர், ரூப் நகர், தலாப் தில்லூ, ஜுவல் சௌக், நியூ ப்ளாட் மற்றும் சஞ்சய் நகர் போன்ற தாழ்வான பகுதிகள் வெள...









