பெண்களுக்கான இட ஒதுக்கீட்டு அரசியலமைப்புத் திருத்த மசோதா மக்களவையில் தோல்வி!
மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இட ஒதுக்கீட்டைச் செயல்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட 'அரசியலமைப்பு (131-வது திருத்தம்) மசோதா, 2026', மக்களவையில் (கீழவையில்) ஒப்புதலைப் பெறத் தவறியது. மக்களவையில் மொத்தம் 528 உறுப்பினர்கள் அவையில் இருந்த நிலையில், மசோதா நிறைவேறத் தேவையான 352 உறுப்பினர்களின் (மூன்றில் இரண்டு பங்கு) பெரும்பான்மையை எட்டத் தவறியது. மசோதா மீதான வாக்கெடுப்பின்போது, 298 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மசோதாவுக்கு ஆதரவாகவும், 230 உறுப்பினர்கள் எதிராகவும் வாக்களித்தனர். மசோதா நிறைவேறத் தேவையான பெரும்பான்மை கிடைக்காததால், இந்தச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வது சாத்தியமில்லை என்று கூறி, மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா வாக்கெடுப்பு முடிவுகளை அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து பேசிய நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, 'எல்லை மறுவரையறை மசோதா,...









