8,600 கோடி நியூரான்களை கொண்ட மனித மூளையை வரைபடமாக்கிய இந்திய விஞ்ஞானிகள்
ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக, நரம்பியல் விஞ்ஞானிகள் மனித மூளையைப் பற்றி ஆய்வு செய்து வருகின்றனர். அறியப்படாத நிலப்பரப்புகளை ஆரம்பக்கால வரைபட வல்லுநர்கள் பல்வேறு சிதறிய தகவல்களைத் தொகுத்து வரைபடமாக்கியது போலவே, விஞ்ஞானிகள் மூளையின் அமைப்பையும் பல்வேறு ஆய்வுகளின் அடிப்படையில் புரிந்துகொள்ள முயன்றுள்ளனர்.
இன்றும்கூட, அல்சைமர் போன்ற நோய்களைக் கண்டறியும் நோயியல் நிபுணர்கள், சுமார் 86 பில்லியன் நியூரான்களை கொண்ட மனித மூளையில் இருந்து எடுக்கப்பட்ட சில திசு மாதிரிகளை மட்டுமே ஆய்வு செய்கின்றனர். இதனால் மூளையின் பெரும்பாலான பகுதிகள் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளப்படாமல் உள்ளன.
அதனால்தான், சென்னை இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐஐடி) உள்ள சுதா கோபாலகிருஷ்ணன் மூளை ஆய்வு மையத்தின் விஞ்ஞானிகள், நரம்பியல் அறிவியலில் நீண்டகாலமாக இருந்து வரும் மிகப்பெரும் இடைவெளி ஒன்றைச் சரிசெய்யும் நோக்க...









