
தெற்கு லெபனானில் ஐ.நா. அமைதிப்படையினரைக் குறிவைத்து நடத்தப்பட்ட தாக்குதலில் ஒரு பிரெஞ்சு வீரர் கொல்லப்பட்டதாகவும், மேலும் மூவர் காயமடைந்ததாகவும் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் அறிவித்துள்ளார்.
சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒரு அறிக்கையில், இதற்குப் பொறுப்பானவர்களை உடனடியாகக் கைது செய்யுமாறும், லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் இடைக்காலப் படையுடன் (UNIFIL) இணைந்து தங்கள் கடமைகளை நிறைவேற்றுமாறும் லெபனான் அதிகாரிகளிடம் பிரான்ஸ் வலியுறுத்துவதாக மக்ரோன் கூறினார்.
இந்தத் தாக்குதலில் மேலும் மூன்று வீரர்கள் காயமடைந்து, பின்னர் மீட்கப்பட்டதையும் அவர் உறுதிப்படுத்தினார். வீரமரணம் அடைந்த வீரருக்கு தேசம் அஞ்சலி செலுத்துவதாகவும், தனது படையினரின் குடும்பத்தினருடனும், லெபனானில் அமைதிப்படைப் பணிகளில் ஈடுபட்டுள்ள அனைத்து இராணுவத்தினருடனும் தேசம் ஒற்றுமையாக நிற்பதாகவும் மக்ரோன் மேலும் கூறினார்.
