நேபாளத்தின் நீர்மின் நிலையப் பகுதிகளில் இந்திய சுரங்க மீட்புக் குழு முன்னேற்றம்!
மோசமான வானிலை மற்றும் கடினமான சூழல் இருந்தபோதிலும், நேபாள ராணுவத்துடன் இணைந்து சிலிமே மற்றும் லாங்டாங் ஆகிய இடங்களில் இந்தியாவின் சிறப்பு சுரங்க மீட்புக் குழு தனது பணியைத் தொடங்கியது; வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்தில் உள்ள இந்த இரண்டு நீர்மின் நிலையப் பகுதிகளிலும் அக்குழு முன்னேற்றம் கண்டுள்ளது. சிலிமேயில் உள்ள சுரங்கப்பாதைக்குள் அக்குழு தனது முகாமை அமைத்ததுடன், லாங்டாங் பகுதியில் 185 மீட்டர் தூரம் வரை ஆய்வு மேற்கொண்டதாக நேபாளத்திற்கான இந்தியத் தூதர் நவீன் ஸ்ரீவாஸ்தவா தெரிவித்தார்.
திங்களன்று, சுரங்க மீட்புப் பணிகளுக்காக அனுப்பப்பட்ட இந்தியத் தொழில்நுட்பக் குழுக்களைச் சந்தித்த தூதர், லாங்டாங் மற்றும் சிலிமே சுரங்கப்பாதைகளில் அவர்கள் மேற்கொண்ட பணிகள் குறித்த விவரங்களைக் கேட்டறிந்தார். "சிலிமேயில் மோசமான வானிலை மற்றும் கடினமான அணுகல் சூழல் இருந்தபோதிலும், அக்குழு சுரங்கப்பாதைக்குள...









