போப் பிரான்சிஸ் காலமானார்! இறுதிச்சடங்கு எப்போது? வாடிகனின் விதிமுறைகள் என்ன சொல்கின்றன?
வாடிகன்:உலகின் மிகப்பெரிய மத சமூகங்களில் ஒன்றான கத்தோலிக்கக் கிறிஸ்தவ மதத்தின் தலைவர், போப் பிரான்சிஸ், உடல்நலக் குறைபாடுகள் காரணமாக இன்று உயிரிழந்துள்ளதாக வாடிகன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே அவர் பல்வேறு உடல்நலப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்த நிலையில், இன்று வாடிகனில் உள்ள தனது இல்லமான Casa Santa Marta-வில் 88வது வயதில் அவர் இழந்துள்ளார்.
போப்பின் உடல்நிலை குறைபாடுகள்:2013ஆம் ஆண்டு முதல் போப்பாக பதவி வகித்து வந்த பிரான்சிஸ், அண்மைக்காலங்களில் இரட்டை நிமோனியா மற்றும் நுரையீரல் தொற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். மேலும் சிறுநீரகச் செயலிழப்பு தொடர்பான அறிகுறிகளும் அவரை எதிர்கொண்டன. கடந்த பிப்ரவரி மாதம் அவர் மிகவும் மோசமான நிலைக்கு சென்றபோது, மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. உடல்நிலை சீராகிய பிறகு, அவர் மீண்டும் பொது பணிகளில் ஈடுபட்டிர...









