ஈரானுக்கு ஆதரவளிக்க ‘முழு இராணுவத் தயார் நிலையில்’ உள்ளதாகக் ஹூதி கிளர்ச்சியாளர்கள்.
ஏமனின் ஹூதி கிளர்ச்சியாளர்கள் ஒரு செய்தியைத் தெரிவித்துள்ளனர். ஈரான் ஆதரவு பெற்ற இந்தக் குழு, நிலைமை மாறும் தருணத்தில் ஈரானுடன் இணைந்து போரில் இறங்க முழுமையாகத் தயாராக இருப்பதாக வியாழக்கிழமை (மார்ச் 26) கூறியுள்ளனர். "நாங்கள் அனைத்து வழிகளுடனும் முழு இராணுவத் தயார் நிலையில் இருக்கிறோம்," என்று ஒரு ஹூதி தலைவர் கூறினார்.
ஈரான் ஹார்முஸ் ஜலசந்தியைத் தொடர்ந்து முற்றுகையிட்டு, எண்ணெய் விலைகளை உயர்த்தி வரும் நிலையிலும், மற்றொரு முக்கிய உலகளாவிய வர்த்தகப் பாதையான பாப் அல்-மண்டாப் ஜலசந்தி அல்லது கண்ணீர்க் கதவு எனும் பாதையைத் தடுத்து, ஒரு புதிய போர் முனையைத் திறப்போம் என்று இந்தக் குழு அச்சுறுத்தியுள்ளது.
பெயர் குறிப்பிட விரும்பாத ஒரு ஹூதி தலைவர், தங்கள் கிளர்ச்சிப் படையினர் "அனைத்து சாத்தியக்கூறுகளுடனும், முழுமையான இராணுவத் தயார்நிலையில்" இருப்பதாக அறிவித்தார். இந்த வார்த்தைப் பிரயோகம...









