ஈரானில் துறைமுக வெடிவிபத்து: 65 பேர் உயிரிழப்பு – 750க்கும் மேற்பட்டோர் காயம்
ஈரானில் அமைந்துள்ள முக்கிய துறைமுகத்தில் நேற்று நடந்த பரபரப்பான வெடிவிபத்து தொடர்பாக தகவல்கள் வெளியாகியுள்ளன. துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு கன்டெய்னரில் இருந்து திடீரென மர்மமான பொருள் வெடித்து சிதறியது. இதில் சுற்றியுள்ள பகுதிகளில் கருப்புப் புகை சூழ்ந்தது. வெடிப்பின் அதிர்வுகள் பல கிலோமீட்டர் தொலைவிலும் உணரப்பட்டதாக தற்காலிக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை தற்போது 65 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 750க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காயமடைந்தவர்களில் பெரும்பாலோர் துறைமுக பணியாளர்கள் மற்றும் அங்கு அருகாமையில் வசித்தவர்கள் எனத் தெரிகிறது.இந்த தீ விபத்து மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்துக்கான காரணம் குறித்து அதிகாரப்பூர்வமாக எதுவும் அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், பாதுகாப்...









