வடகிழக்கு கஜகஸ்தானில் 3,500 வருட பழமையான மர்ம நகரம் கண்டுபிடிப்பு!
வடகிழக்கு கஜகஸ்தானின் பரந்த புல்வெளிகளின் அடியில், சுமார் 3,500 ஆண்டுகளாக புதைந்திருந்த மிகப்பெரும் நாகரிகத்தின் தடயங்கள் அசாதாரணமான தொல்லியல் கண்டுபிடிப்பாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன. வெண்கலக் காலத்தைச் சேர்ந்த, மிகப் பெரிய மற்றும் திட்டமிட்டு அமைக்கப்பட்ட பழமையான ‘செமியார்கா’ (Semiyarka) எனப்படும் இந்த நகரம் உலக வரலாற்றை மாற்றி அமைக்கும் வகையில் முக்கியத்துவம் வாய்ந்ததாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
சர்வதேச அளவில் பரபரப்பு ஏற்படுத்திய கண்டுபிடிப்பு:லண்டன் மற்றும் கஜகஸ்தான் பல்கலைக்கழகங்களை சேர்ந்த தொல்லியல் ஆராய்ச்சியாளர்கள் குழுவின் கூட்டு முயற்சியால், சுமார் 140 ஹெக்டேர் பரப்பளவைக் கொண்ட இந்த நகரம் முறையாக ஆய்வு செய்யப்பட்டு, அதன் மர்மங்கள் உலகிற்கு வெளியிடப்பட்டுள்ளன. ‘ஏழு பள்ளத்தாக்குகளின் நகரம்’ என்ற பொருள்படும் செமியார்கா, கஜகஸ்தான் பகுதியில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப் பெரிய திட...









