மைக்ரோசாப்டின் பணிநீக்கங்களில் AI இயக்குனர் கூட தப்பவில்லை.
மைக்ரோசாப்ட் சுமார் 6,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்துள்ளது, இது அதன் உலகளாவிய பணியாளர்களில் கிட்டத்தட்ட 3% ஆகும். இந்த நடவடிக்கை அந்த நிறுவன கட்டமைப்பை மறுசீரமைக்கும் முயற்சிகளின் ஒரு பகுதி என்று கூறப்படுகிறது. இந்த பணிநீக்கத்தில் செயற்கை நுண்ணறிவு இயக்குநரான "கேப்ரியெலா டி குய்ரோஸ்"என்பவரும் ஒருவர், அவர் நிறுவனத்தின் இந்த "கசப்பான" முடிவை சமூக ஊடகங்களில் பகிர்ந்து கொண்டார்.
"பகிர்ந்து கொள்ள கசப்பான செய்தி: மைக்ரோசாப்டின் சமீபத்திய சுற்று பணிநீக்கங்களால் நான் பாதிக்கப்பட்டேன். நான் சோகமாக இருக்கிறேனா? நிச்சயமாக. பணிநீக்கம் செய்யப்பட்டவர்களில் பல திறமையான நபர்களைப் பார்த்து நான் மனம் உடைந்தேன். இவர்கள் பணி மற்றும் நிறுவனம் மீது ஆழ்ந்த அக்கறை கொண்டவர்கள், உண்மையிலேயே ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியவர்கள்," என்று அவர் சிரித்துக் கொண்டிருக்கும் படத்துடன் பதிவிட்டிருக்கிறார்.
2023 ஆ...









