Tuesday, December 2பாடுபடுபவர் பயன்பெற வேண்டும்

தமிழ்நாடு

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

திருப்பூர் சிறப்பு எஸ்.ஐ. கொலை வழக்கு: கொலையாளி மணிகண்டன் என்கவுன்டரில் சுட்டுக்கொலை!

தமிழ்நாடு
திருப்பூர் மாவட்டத்தில் சிறப்பு எஸ்.ஐ. சண்முகவேலை படுகொலை செய்த பிரதான குற்றவாளி மணிகண்டன், என்கவுன்டரில் போலீசாரால் சுட்டுக்கொல்லப்பட்டார். இந்த சம்பவம் காவல்துறையிலும் பொதுமக்களிடையிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில், மடத்துக் குளம் பகுதியில் அமைந்துள்ள தென்னந்தோப்பொன்றை அதிமுக எம்.எல்.ஏ. மகேந்திரன் வைத்துள்ளார். இங்கு திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியைச் சேர்ந்த மூர்த்தி (60) மற்றும் அவரது மகன் தங்கபாண்டியன் (25) ஆகியோர் பணி செய்துவருகின்றனர். இவர்களுடன், மூர்த்தியின் மற்றொரு மகன் மணிகண்டன் (30) சமீபத்தில் அந்த கிராமத்திற்கு வந்திருந்தார். முந்தைய இரவில் மது அருந்திய பின்னர், தந்தை, மகன்கள் ஆகிய மூவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, அரிவாளுடன் மோதல் ஏற்பட்டது. இச்சம்பவத்தை பண்ணை மேலாளர் ரங்கசாமி, உடனடியாக குடிமங்க...
ஆடிப்பெருக்கு: மக்கள் புனித நீராடி வழிபாடு!

ஆடிப்பெருக்கு: மக்கள் புனித நீராடி வழிபாடு!

தமிழ்நாடு
ஆண்டு தோறும், ஆடி 18ம் தேதி, நீர்நிலைகளில் மங்கலப் பொருட்களை விட்டு, குடும்பத்துடன் மக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாடுவது வழக்கம். இவ்வாண்டு, ஆடிப் பெருக்கை முன்னிட்டு பக்தர்கள் கோவில்களில் தரிசனம் செய்து கோலாகலமாக கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் தாலி பெருக்கி கட்டி புதுமணத் தம்பதிகள் சிறப்பு வழிபாடு செய்தனர். ஆடிப்பெருக்கு பண்டிகையையொட்டி, அதிகாலை முதல் பக்தர்கள் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்வதில் ஆர்வம் காட்டினர். ஆடிப்பெருக்கு பண்டிகையை, தங்கள் வீடுகளில் உள்ள குடிநீர் குழாய்களிலும், சிலர் கடற்கரையிலும் கொண்டாடினர். ஆடிப்பெருக்கை முன்னிட்டு தமிழகம் முழுவதும் மக்கள் கோலாகலமாக கொண்டாடி வருகின்றனர். விவசாயிகள் இந்த தினத்தில் விதைகளை விதைப்பார்கள். இந்நாளில் விதைத்தால் விளைச்சல் பெரும் என்பது ஐதீகம். ஆடி 18 அன்று மகா லட்சுமியை வழிபட்டு செய்யும் செ...
புகழ்பெற்ற கல்வியாளர் வசந்தி தேவி 87 வயதில் காலமானார்.

புகழ்பெற்ற கல்வியாளர் வசந்தி தேவி 87 வயதில் காலமானார்.

தமிழ்நாடு
திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தரும், 2016 ஆம் ஆண்டு ஆர்.கே. நகரில் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதாவை எதிர்த்துப் போட்டியிட்ட மனித உரிமை ஆர்வலருமான வி. வசந்தி தேவி, வெள்ளிக்கிழமை, ஆகஸ்ட் 1, 2025 தனது சொந்த ஊரான மதுரை விளாச்சேரியில் மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 87. திண்டுக்கலில் 1938 ஆம் ஆண்டு பிறந்த வசந்தி தேவி, தனது உயர்நிலைக் கல்வியை முடிக்க 15 வயதில் அப்போதைய சென்னைக்குச் சென்றார். சென்னை பிரசிடென்சி கல்லூரியில் வரலாற்றில் பட்டம் பெற்ற அவர், 1970 களில் பிலிப்பைன்ஸ் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டத்திற்காக பிலிப்பைன்ஸ் சென்றார். 1980களில் இந்தியா திரும்பிய பிறகு, சென்னை ராணி மேரி கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றினார், பின்னர் 1988 மற்றும் 1990 க்கு இடையில் கும்பகோணத்தில் உள்ள அரசு மகளிர் கல்லூரியின் முதல்வராக நியமிக்...
தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம் – ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்

தமிழகத்தை புறக்கணிக்கும் இந்திய பருத்தி கழகம் – ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் புகார்

தமிழ்நாடு
தமிழகத்தில் இயங்கும் ஸ்பின்னிங் மில்கள் வணிக நெருக்கடியில் சிக்கிக்கொண்டுள்ளன. அதன் முக்கியக் காரணங்களில் ஒன்றாக, இந்திய பருத்தி கழகம் (Cotton Corporation of India - CCI) தமிழகத்திற்கு பஞ்சு விநியோகம் செய்ய மறுப்பது என ஸ்பின்னிங் மில் உரிமையாளர்கள் கடும் புகார் தெரிவித்துள்ளனர். இந்தியா முழுவதும் செயல்படும் 4,000-க்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்களில், 40 சதவீதம் தமிழ்நாட்டில் உள்ளன. இதில் கோவை, திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்கள் மையமாக திகழ்கின்றன. ஆனால் நாட்டில் உற்பத்தியாகும் பருத்தி முழுமையான தேவைச்சுமையை சமாளிக்க முடியாத நிலை காணப்படுகிறது. எனவே, சில மில்கள் இறக்குமதி செய்யும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. மத்திய அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் பருத்திக்கான குறைந்தபட்ச ஆதார விலையை (MSP) பெரிதும் உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக, இந்திய பருத்தி கழகம், அதிக விலையில் பருத்தி க...
‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகத்துக்கு தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் தடை!

‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ என்ற வாசகத்துக்கு தமிழக ரியல் எஸ்டேட் ஆணையம் தடை!

தமிழ்நாடு
வீடு மற்றும் மனை வாங்கும் பொதுமக்கள் ஏமாறும் வகையில், “நிபந்தனைகளுக்கு உட்பட்டது” என்ற வாசகத்தை சில ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் தவறாக பயன்படுத்தி கூடுதல் கட்டணங்களை வசூலித்து வருகிறார்கள் என்ற புகார்கள் அதிகரித்துள்ளன. இதை தொடர்ந்தே, ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம் (TNRERA) அந்த வாசகத்தை தடை செய்யும் வகையில் புதிய உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இனிமேல் வீடு அல்லது மனை விற்பனைக்கு விளம்பரம் செய்யும் போது, எந்த இடத்திலும் ‘நிபந்தனைகளுக்கு உட்பட்டது’ (Terms and Conditions Apply) என்ற வாசகம் பயன்படுத்த அனுமதியில்லை என ஆணையம் தெளிவாக அறிவித்துள்ளது. இந்த வார்த்தையை பல நிறுவனங்கள், பின் தொடரும் மறைமுக கட்டணங்களை நியாயப்படுத்த ஒரு தலையாய கருவியாக பயன்படுத்துவதாகும். இத்தரமான வழிமுறைகளை மீறி செயல்படும் நிறுவனங்கள் மீது, அபராதம் விதிப்பது, உரிமம் ரத்து செய்தல் போன்ற கடுமையான நடவடிக்கைக...
ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

ஆரம்ப சுகாதார நிலையங்களில் 24 மணி நேரமும் டாக்டர்கள் இருக்க வேண்டும்: மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு உத்தரவு

தமிழ்நாடு
தமிழ்நாட்டின் கிராமப்புற பகுதிகளில் இயங்கும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் (Primary Health Centres - PHC) 24 மணி நேரமும் மருத்துவர், செவிலியர் உள்ளிட்ட மருத்துவப் பணியாளர்கள் பணியில் இருக்க வேண்டும் என மாநில மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு கடும் உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும், மருத்துவர் அலட்சியத்தால் உயிரிழந்தக் குழந்தையின் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்குமாறும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் புதுப்பாக்கத்தை சேர்ந்த தேவமணி, தனது மகள் சுப்புலட்சுமி கடந்த 2021ஆம் ஆண்டு கர்ப்பமாக இருந்தபோது, அவளை முருகேரி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்ததாக மனுவில் தெரிவித்துள்ளார். அப்போது சிகிச்சை வழங்கியபோது, அவரது மகளுக்கு தீவிர ரத்தப்போக்கு ஏற்பட்டுள்ளது. சிகிச்சை தொடர முடியாத நிலை காரணமாக, பெரிய மருத்துவமனைக்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டதால், அவளை ஆம்புலன்ஸில் கொண...
முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்

தமிழ்நாடு
தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகியோரது வீடுகளுக்கு ஒரே நேரத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதையடுத்து சென்னை முழுவதும் பரபரப்பான நிலை ஏற்பட்டது. இதேபோன்று, சென்னை சர்வதேச விமான நிலையம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்துக்கும் வெடிகுண்டு மிரட்டல் எமெயில்கள் வந்தன. அனைத்து இடங்களிலும் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விசாரணையில் இவை அனைத்தும் புரளி என்று உறுதி செய்யப்பட்டது. ஒரே நேரத்தில் ஸ்டாலின் மற்றும் விஜய் வீடுகளுக்கு மிரட்டல் சென்னை எழும்பூரில் உள்ள மாநில தலைமை காவல் கட்டுப்பாட்டு மையத்திற்கு**, நேற்று காலை 5.30 மணியளவில், மர்ம நபர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர், “முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர் விஜய் வீடுகளில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன” என கூறியதும், அழைப்பை துண்டித்துவிட்டார். இதையடுத்து, தகவல் தேனாம்பேட்டை மற்றும் நீலாங்கரை காவல் நி...
ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணை நிரம்பியது!

ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு, மேட்டூர் அணை நிரம்பியது!

தமிழ்நாடு
காவிரி ஆற்றின் பகுதிகளில் கனமழை பெய்து வருவதால், ஒகேனக்கல்லில் நீர்வரத்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. கர்நாடகாவின் பெய்த பருவமழை காரணமாக கேஆர்எஸ், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி கரையோர கரையோர மக்களுக்கு கர்நாடக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 98 ஆயிரம் கனஅடியில் இருந்து 1.05 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், ஆற்றில் பரிசல் இயக்கவும், சுற்றுலாப் பயணிகள் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை நீடித்து வருகிறது. தொடர் நீர்வரத்து காரணமாக கடந்த ஜூலை 25ம் தேதி நடப்பாண்டில் 4வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது. 8 மணி நிலவரப்படி, மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. நீர்வரத்து ஒரு லட்சத்து 500 கனஅடியாக உள்ளது. கால்வாய்க்கு 500 கனஅடி நீர் உள்பட மொத்தம் ஒரு லட்சத்து 500 கன...
தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!

தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கான எம்.பி.பி.எஸ். கல்வி கட்டணங்கள் நிர்ணயம்!

தமிழ்நாடு
தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் எம்.பி.பி.எஸ். படிப்புக்கான கல்வி கட்டணங்கள் குறித்த விவரங்கள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அரசு ஒதுக்கீடு, நிர்வாக ஒதுக்கீடு மற்றும் வெளிநாடுகளில் வாழும் இந்திய மாணவர்களுக்கான (NRI) இடங்களுக்கு தனித்தனியாக கட்டணங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 4.35 லட்சம் முதல் 30 லட்சம் வரை ஆண்டுக்கட்டணம் தற்போது தமிழ்நாட்டில், சுயநிதி தனியார் மருத்துவக் கல்லூரிகளில் 3,450 எம்.பி.பி.எஸ். இடங்களும், தனியார் மருத்துவ பல்கலைக்கழகங்களில் 550 இடங்களும் உள்ளன. இதில், 65 சதவீதம் அரசு ஒதுக்கீட்டு இடங்களாகவும், 35 சதவீதம் நிர்வாக ஒதுக்கீடு மற்றும் NRI ஒதுக்கீடு இடங்களாகவும் பிரிக்கப்பட்டுள்ளன. இந்த இடங்களுக்கு இந்த ஆண்டுக்கான கட்டணங்களை நிர்ணயிப்பதற்காக, நீதிபதி ஆர். பொங்கியப்பன் தலைமையில், மக்கள் நல்வா...
14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

14 ஆண்டுகளுக்கு பின் திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயிலில் கும்பாபிஷேகம்!

தமிழ்நாடு
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதன்மையானதாக விளங்கும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில், 14 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று (ஜூலை 14) அதிகாலை 5.30 மணியளவில் கோலாகலமாக கும்பாபிஷேகம் நடைபெற்றது. லட்சக்கணக்கான பக்தர்கள் திருப்பரங்குன்றத்தை நோக்கி திரண்டனர். சமீபத்தில் ரூ.2.37 கோடி மதிப்பில் கோயிலில் திருப்பணி நடைபெற்றது. இதைத் தொடர்ந்து, ஜூலை 10ம் தேதியிலிருந்து யாகசாலை பூஜைகள் ஆரம்பிக்கப்பட்டன. நேற்று மாலை 7ம் கால பூஜை நடைபெற்ற பின்னர், இரவில் மூலவர்களுக்கு காப்பு கட்டும் சடங்கும் நடந்தது. இன்று அதிகாலை 3 மணிக்கு மங்கள இசையுடன் நிகழ்வுகள் தொடங்கின. பின்னர் விக்னேஸ்வர பூஜை, புண்ணிய வாசம், மற்றும் அதிகாலை 3.45 மணிக்கு 8ம் கால யாகசாலை பூஜை நடைபெற்று முடிந்தது. அதன்பின், 4.30 மணியளவில் யாகசாலையில் பூஜிக்கப்பட்ட புனித நீர் நிரப்பிய தங்க மற்றும் வெள்ளிக் குடங்கள், ...