
வணிக காஸ் சிலிண்டர் விலை குறைப்பு.
வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. இதன் பேரில், தற்போது 19 கிலோ எடையுடைய ஒரு சிலிண்டர் ரூ.1,738க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எனும் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு 14.20 கிலோ மற்றும் வணிக பயன்பாட்டிற்கு 19 கிலோ எடையிலான சமையல் காஸ் சிலிண்டர்களை விநியோகம் செய்து வருகின்றன. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மாற்றத்தைத் தொடர்ந்து, ஒவ்வொரு மாதமும் 1ம் தேதி காஸ் சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது.
அந்த வகையில் இன்று (செப்டம்பர் 1) முதல் வணிக காஸ் சிலிண்டர் விலை ரூ.51.50 குறைக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன் மாதம் ரூ.24, ஜூலை மாதம் ரூ.58.50, ஆகஸ்ட் மாதம் ரூ.33.50 என தொடர்ந்து வணிக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டு வந்தது.
தமிழகத்தில் கடந்த மாதம் வீட்டு பயன்பாட்டுக்கான காஸ்...