நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பங்கேற்கிறார்: முத்தரசன் பேட்டி.
"இந்திய கம்யூனிஸ்டு கட்சி தொடங்கிய நாள், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாள் விழா சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் இன்று (டிச.26) தொடங்குகிறது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்கின்றனர்" என்று இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முத்தரசன், ''இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நூற்றாண்டு விழாவும் கட்சியின் மூத்த தலைவர் இரா.நல்லகண்ணுவின் 100-வது பிறந்த நாளும் கட்சி தலைமை அலுவலகமான சென்னை தி.நகரில் உள்ள பாலன் இல்லத்தில் டிச.26 காலை 9 மணியளவில் தொடங்கியது. இந்திய கம்யூனிஸ்டு கட்சி 1925-ம் ஆண்டு டிச.26-ம் தேதி கான்பூரில் ம.வெ.சிங்காரவேலர் தலைமையில் தொடங்கப்பட்டது. கட்சி தொடங்கப்பட்ட நாளும், கட்சியின் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணுவும் ஒரே ஆண்ட...