ஆசிய ஹாக்கி சூப்பர்-4 சுற்று: இந்தியா – தென் கொரியா ஆட்டம் 2-2 என டிரா!
12வது ஆசிய ஹாக்கி கோப்பை தொடரில், சூப்பர்-4 சுற்றில் இந்தியா மற்றும் தென் கொரியா அணிகள் மோதிய போட்டி 2-2 என சமனில் முடிந்தது. இந்த தொடரில் இந்தியா, நடப்பு சாம்பியன் தென் கொரியா, மலேசியா, கஜகஸ்தான் உட்பட மொத்தம் 8 அணிகள் 2 பிரிவுகளாகப் பிரிந்து பங்கேற்றன. அதில், ‘ஏ’ பிரிவில் இந்தியா, சீனா, ‘பி’ பிரிவில் மலேசியா, தென் கொரியா அணிகள் முதல் 2 இடங்களை பிடித்து சூப்பர்-4 சுற்றுக்கு தகுதி பெற்றன.
மழை காரணமாக தாமதம்:சூப்பர்-4 சுற்றுப் போட்டிகள் நேற்று தொடங்கின. ஆனால் கடும் மழை காரணமாக இந்தியா – தென் கொரியா ஆட்டம் 50 நிமிட தாமதமாகத் தொடங்கியது. உலக தரவரிசையில் 7வது இடத்தில் இருக்கும் இந்தியா, 14வது இடத்தில் உள்ள தென் கொரியாவை எதிர்கொண்டது.
முதல் பாதி: கோல்களின் அதிர்ச்சிபோட்டியின் 8வது நிமிடத்தில் இந்திய வீரர் ராஜ் குமாரின் பாஸைப் பெற்ற ஹர்திக் சிங், அற்புதமான பீல்டு கோல் அடித்து இந்தி...








