
டிசம்பர் 6, 2025 அன்று கோவாவின் அர்போராவில் உள்ள ‘பிர்ச்’ (Birch) இரவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு, தலா 20 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கோவா அமர்வு உத்தரவிட்டுள்ளது.
சௌரப் லுத்ரா, கௌரவ் லுத்ரா மற்றும் அவர்களது நிறுவனம் இந்த இழப்பீட்டுத் தொகையை நீதிமன்றத்தில் டெபாசிட் செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் 20 பணியாளர்கள் மற்றும் 5 சுற்றுலாப் பயணிகள் என மொத்தம் 25 பேர் உயிரிழந்தனர்.
அர்போரா இரவு விடுதி தீ விபத்தைத் தொடர்ந்து, உயர் நீதிமன்றம் தாமாக முன்வந்து பொது நல வழக்கினைத் தொடர்ந்திருந்தது. இந்த வழக்கின் விசாரணையின்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
முன்னதாக, அந்த நிறுவனம் தனது பணியாளர்களுக்கு தலா இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கியிருந்தது. தற்போது, கூடுதலாக வழங்கப்பட வேண்டிய 20 லட்சம் ரூபாயில், ஐந்து லட்சம் ரூபாயை நவம்பர் 16-ஆம் தேதிக்குள்ளும், மேலும் ஐந்து லட்சம் ரூபாயை டிசம்பர் மாதத்திற்குள்ளும், மீதமுள்ள 10 லட்சம் ரூபாயை பிப்ரவரி 7, 2027-க்குள்ளும் நீதிமன்றத்தில் டெபாசிட் செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
