
டிரம்ப் அறிவித்த 27% வரி – இந்திய நகைத் துறைக்கு பெரிய பின்னடைவு
அமெரிக்கா நோக்கி செல்லும் இந்திய நகை ஏற்றுமதிக்கு இடையூறு – நகை வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்களுக்கு முன்னெச்சரிக்கை!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் இந்தியாவை தவிர்க்க முடியாத வர்த்தக நெருக்கடிக்குள் இட்டிருக்கிறார். அவர் அறிவித்துள்ள 27% வரி உயர்வு, இந்தியாவின் ரத்தினக் கற்கள் மற்றும் தங்க நகை ஏற்றுமதித் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.இதுவரை 6% மட்டுமே அமெரிக்கா இந்திய நகைகளுக்கு வரி விதித்து வந்தது. ஆனால் தற்போது இந்த எண்ணிக்கை 33% ஆக உயர்ந்துள்ளது. இதனால், இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குச் செல்லும் நகை, ரத்தினக் கற்கள் விலையேற்றம் சந்திக்கவிருக்கின்றன. 2023-24ஆம் நிதியாண்டில் மட்டும் இந்தியா $33 பில்லியன் மதிப்பில் நகை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் $10 பில்லியன் அளவுக்கு அமெரிக்காவுக்கே அனுப்பப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் இந்த வரி உயர்வால் நகைகளின...