உலக துப்பாக்கி சுடுதல், 25 மீட்டர் ‘பிஸ்டல்’ பிரிவில் சிம்ரன்பிரீத் கவுர் தங்கம்.
தோகா (கத்தார்): உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டிகளில் இந்திய வீரர்கள் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி பதக்கங்களை குவித்துள்ளனர். பெண்களுக்கான 25 மீட்டர் ‘பிஸ்டல்’ பிரிவில் இந்தியாவின் சிம்ரன்பிரீத் கவுர் பிரார் தங்கப் பதக்கத்தை கைப்பற்றினார்.
தகுதி சுற்றில் இருந்து பதக்க மேடைக்கு:கத்தார் தலைநகர் தோகாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் பைனல் போட்டிகளில், 25 மீட்டர் பெண்கள் ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச் சுற்றில் இந்திய வீராங்கனைகள் சிறப்பாக விளையாடினர். ஈஷா சிங் 585.23 புள்ளிகளுடன் 4வது இடம், சிம்ரன்பிரீத் கவுர் பிரார் 584.25 புள்ளிகளுடன் 5வது இடத்தில் இருந்து பைனலுக்கு முன்னேறினர். அதே பிரிவில் போட்டியிட்ட மனு பாகர் (581.22 புள்ளி) 9வது இடத்தில் நின்று பைனல் வாய்ப்பை தவறவிட்டார்.
பைனலில் சிம்ரன் பிரகாசம்:துல்லியத்துடன் பைனலில் ஆடிய 21 வயது இளம் சுடுபவர் சிம்...









