பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்பப் பெற இந்தியாவுக்கு வங்கதேசம் கடிதம்!
வங்கதேசத்தின் வெளியுறவு அமைச்சகம் திங்கள்கிழமை (டிசம்பர் 23) பதவி நீக்கம் செய்யப்பட்ட பிரதமர் ஷேக் ஹசீனாவைத் திரும்பப் பெற இந்தியாவுக்கு முறைப்படி கடிதம் எழுதியுள்ளது.
டாக்காவில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய வங்கதேச வெளியுறவு அமைச்சர் தௌஹித் ஹொசைன், "எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் தெளிவாக இந்தியாவிடம் தெரிவித்துள்ளோம். அவர் (ஷேக் ஹசீனா) நீதிமன்ற நடவடிக்கைக்கு திரும்ப வேண்டும் என்று நாங்கள் தெரிவித்துள்ளோம்" என்றார்.
இதற்கிடையில், இந்திய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர், "இன்று பங்களாதேஸிடம் இருந்து ஒப்படைப்பு கோரிக்கை தொடர்பாக ஒரு குறிப்பு வாய்மொழியைப் பெற்றுள்ளோம் என்பதை உறுதிப்படுத்துகிறோம். இந்த நேரத்தில், நாங்கள் எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை." என்று கூறியுள்ளார்.
ஜூலை மாதம் சிவில் சர்வீஸ் வேலை ஒதுக்கீட்டிற்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடத்தியதால் நா...









