‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் 166வது பிறந்த நாள்!
“தொழிலாளர்கள் நலனுக்காக தம்மையே அர்ப்பணித்தவர்” - ‘சிந்தனைச் சிற்பி’ சிங்காரவேலரின் 166வது பிறந்த நாள்!
“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் அவர்களின் 166-வது பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர் பெருமக்கள் (18.2.2025) காலை 9.30 மணியளவில் சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அன்னாரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
“சிந்தனைச் சிற்பி” ம.சிங்காரவேலர் அவர்கள், கடந்த 1860ஆம் ஆண்டு, பிப்ரவரி திங்கள் 18 ஆம் நாள் சென்னை மயிலாப்பூரில் பிறந்தார். மிகவும் பின்தங்கிய மீனவர் சமுதாயத்தைச் சார்ந்திருந்தாலும், சிறுவயது முதற்கொண்டே கற்றறிவதிலும், அரிய பல நூல்களைத் தேடிப் படிப்பதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.
தமிழ், ஆங்கிலம், இந்தி, உருது, பிரெஞ்சு, ஜெர்மன் உள்ளிட்ட பல மொழிகளைக் கற்றவர். ஏழை மக்களுக்க...









