தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் கோலாகல தொடக்கம்!
தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் தமிழ்நாடு முழுவதும் ஆண்டுதோறும் மிகுந்த உற்சாகத்துடன் நடத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், 2026 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் இன்று (ஜனவரி 3) கோலாகலமாக தொடங்கியது.
தமிழ்நாட்டிலேயே அதிகமான ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை விளங்குகிறது. குறிப்பாக, அதிகப்படியான வாடிவாசல்கள் அமைந்துள்ள மாவட்டம் என்ற பெருமையும் இதற்கே உண்டு. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் தமிழ்நாட்டின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி தச்சங்குறிச்சியில் நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது.
தச்சங்குறிச்சி கிராமத்தில் உள்ள புனித விண்ணேற்பு அன்னை ஆலய புத்தாண்டு மற்றும் அந்தோணியார் பொங்கல் விழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்கக் கோரி, கிராம ஜல்லிக்கட்டு விழா குழுவி...









