பிரான்சில் நடைபெறும் ஜி7 (G7) உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி இன்று பங்கேற்கிறார்
ஜி7 உச்சிமாநாட்டில் பங்கேற்கப் பிரதமர் நரேந்திர மோடி இன்று பிரான்ஸின் எவியன் (Evian) நகரை வந்தடைகிறார். அங்கு வந்திறங்கும் பிரதமரை, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் முறைப்படி வரவேற்பார். அதனைத் தொடர்ந்து, "புதிய கூட்டணிகளை உருவாக்குதல் மற்றும் சர்வதேச ஒற்றுமையை மீட்டெடுத்தல்" (Forging New Partnerships and Rebuilding International Solidarity) என்ற கருப்பொருளில் நடைபெறும் உச்சிமாநாட்டின் பணி அமர்வில், ஜி7 நாடுகள் மற்றும் கூட்டாளர் நாடுகளின் தலைவர்கள், உலக வங்கி மற்றும் ஆப்பிரிக்க மேம்பாட்டு வங்கியின் பிரதிநிதிகளுடன் பிரதமர் மோடி பங்கேற்பார்.
இம்மாநாட்டின் ஒரு பகுதியாக, கனடா பிரதமர் மார்க் கார்னி, ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் கியர் ஸ்டார்மர் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் ஆகியோருடன் பிரதமர் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவும் திட்டமிடப்...









